`உடைந்த சத்துணவு முட்டை' - டோட்டல் திருச்சியும் பரபரப்பில் - அடுத்தடுத்து... கிளம்பிய மெகா பூதம்

x

திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு முத்திரையுடன் கூடிய சத்துணவு முட்டைகளை சட்ட விரோதமாக பயன்படுத்தி வந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

திருச்சி மாவட்டம் துறையூரில், இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், சமூக ஆர்வலர்களை பலரை கொந்தளிக்க செய்தது...

முட்டையை வைத்து ஆம்லேட், ஆஃப் பாயில், முட்டை தோசை என வெரைட்டி காட்டும் இந்த உணவகத்தில் அதற்கு பயன்படுத்தப்படும் முட்டை தான் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது..

ஆம், விதவிதமான உணவுகள் செய்ய பயன்படுத்தப்பட்ட முட்டைகள் அனைத்தும் அரசு முத்திரை பதித்த சத்துணவு முட்டைகள் என்பதும், சட்டவிரோதமாக அவற்றை வாங்கியதும் அம்பலமாகியுள்ளது...

ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 5, 6 ட்ரேக்களில் சத்துணவு முட்டையை பதுக்கி வைத்து உணவகம் நடத்தி வந்துள்ளனர்...

முட்டை மட்டுமன்றி, மாணவ, மாணவியரின் பசியாற்ற அங்கன்வாடியில் இருந்து பாமாயில், அரிசி, பருப்பு, உட்பட அனைத்து பொருட்களையும் தனியார் உணவகத்திற்கே தினந்தோறும் விற்பனை செய்து வருவதாக பகீர் கிளப்பியுள்ளனர் அப்பகுதி மக்கள்...

இந்த தகவல், துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவிய நிலையில், அதிகாரிகள் அந்த உணவகத்தில் நேரடியாக ஆய்வு செய்தனர்.

நீண்ட நேர ஆய்வுக்கு பின், சட்டவிரோதமாக முட்டைகளை பயன்படுத்திய உணவகத்திற்கு துறையூர் தாசில்தார் மோகன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

அத்துடன் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், உணவக உரிமையாளர் ரத்தினத்தை போலீசார் கைது செய்தனர்.

இந்த சத்துணவு முட்டை விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கும் சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்