சாம்பாருக்காக கேங்க்ஸ்டராக மாறிய திருச்சி வழக்கறிஞர்கள் - வெறித்தனமாக தாக்கி கொண்ட காட்சிகள்
திருச்சியில், வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில், உணவு பெறுவதில் ஏற்பட்ட தகராறில் சாம்பார் வாலியைக் கொண்டு வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் உணவருந்த வந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை கண்ட சங்க பொருளாளர் கிஷோர், அனைவரையும் வரிசையில் நின்று உணவருந்த கூறிய போது, ஜூனியர் வழக்கறிஞர் திடீரென வரிசையில் புகுந்து சாப்பாடு பெற முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பொருளாளர் கேட்டதையடுத்து, வழக்கறிஞர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பானது. இதில் செயலாளர் மற்றும் பொருளாளர் மீது சாம்பாரை ஊற்றி சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.