போலி சான்றிதழ் வைத்து நிலம் பதிவு.. வித்தியாசமாக முயற்சி செய்த கும்பல்.. தொக்காக தூக்கிய போலீஸ்

x

போலி சான்றிதழ் தயாரித்து நிலத்தை பதிவு செய்த ஒரு பெண் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நான்கு பேரை திருவெறும்பூர் நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில், ஆவணங்கள் காணமல் போனது குறித்து போலியான ரசீது தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக நான்கு பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன், சாந்தி, வழக்கறிஞர் காமராஜ், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களை விசாரித்த போது, போலி ஆவணங்கள் மற்றும் காவல் துறையால் வழங்கப்படும் காணாமல் போன பத்திரத்துக்கான ரசீது ஆகியவற்றை தயாரித்து நிலத்தை விற்க முற்பட்டது தெரிய வந்தது. இதில் நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஜெகநாதன் என்பவரை மட்டும் வயது மூப்பு காரணமாக ஜாமினில் விடுவித்தனர். மற்ற மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்