சாதனை புரிந்த மணப்பாறை அரசு மருத்துவர்கள்

x

பெண்ணின் வயிற்றில் இருந்து 5 கிலோ கட்டியை அகற்றி, மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை காமராஜர் அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக கலா என்ற பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் சோதனை செய்ததில், பெண்ணின் வயிற்றில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு தேவையான அளவு பெண்ணின் உடலில் ரத்தம் இல்லாத நிலையில், 4 யூனிட் ரத்தத்தை செலுத்தி பெண்ணின் ரத்த அளவு அதிகரிக்கப்பட்டது. பின்பு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழு, பெண்ணின் வயிற்றில் இருந்து 5 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். அரசு மருத்துவமனை என்றால் தாமதமான சிகிச்சை என்ற விமர்சனம் எழும் நிலையில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டு, வயிற்றில் இருந்து 5 கிலோ கட்டியை அகற்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டை பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்