சிறுமியின் தொண்டைக்குள் கேமராவை அனுப்பி பார்த்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொட்டியம் வட்டம், மணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு என்பவரது 7 வயது மகள் கிருத்திகா. இவர், தின்பண்டம் வாங்குவதற்காக 5 ரூபாய் நாணயத்தை வாங்கிக்கொண்டு கடைக்கு சென்றபோது, எதிர்பாராத விதமாக நாணயத்தை விழுங்கியுள்ளார். உடனே வெளியே எடுக்க திருநாவுக்கரசு முயன்றபோது, தொண்டையில் சிக்கிய நாணயம் உள்ளே சென்றுள்ளது. இதையடுத்து, திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு, எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது, உணவுக்குழாயில் நாணயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மூச்சுத்திணறலால் சிறுமி அவதியுற்றதால், சர்ஜிகல் கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி துறைத் தலைவர் கண்ணன் தலைமையிலான மருத்துவர்கள் குழு, அறுவை சிகிச்சை இன்றி நாணயத்தை வெளியே எடுத்தது. தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story