எரிபொருளை தீர்த்த பைலட்... உலகையே திரும்ப வைத்த திருச்சி..! கடவுளாக மாறிய ஜைனால் - ஸ்ரீகிருஷ்ணா
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறால் நடுவானில் சிக்கிய விமானத்தை விமானிகள் சாதூர்யமாக செயல்பட்டது எப்படி...? Hydraulic Failure என்றால் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
விமானம் வானில் பறக்கவும், தரையிறங்கவும் முக்கியமான தரையிறங்கும் கியர், பிரேக் உள்ளிட்ட செயல்பாட்டை கட்டுப்படுத்தும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டால், ஹைட்ராலிக் செயலிழப்பு என்று அறிவிக்கப்படுகிறது. சமீபகாலமாக தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக இதுபோல் கோளாறு ஏற்பட்டால் பெரும்பாலான விமானங்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளன. துரதிருஷ்டவசமான சம்பவம் தவிர்க்க முடியாமலும் போகலாம் என்பதற்கு 2022 ஏப்ரலில் கோஸ்டாரிகாவில் சரக்கு விமானம் 2 ஆக உடைந்தது சான்று...
இப்படியொரு சூழலில் பெல்லி லேண்டிங் முறையிலே ஒரு விமானத்தை தரையிறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் நெடுமாறனிடம் பேசியபோது, விமானத்தை ஓடுதளத்திலிருக்கும் புல்வெளியில் இறக்குவதே பெல்லி லேண்டிங் என்றார்.
திருச்சியில் விமானம் மேலே சென்றபோது, விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இப்படிப்பட்ட சூழலில் விமானத்தை அப்படியே இறக்க முடியாது என சொல்லும் முன்னாள் விமானப்படை அதிகாரிகள், விமான எடையை குறைக்க அதிலிருக்கும் எரிபொருளை குறைக்க வேண்டும் என்கிறார்கள்.
அதன்படி திருச்சியில் விமானம் 2 மணி நேரத்திற்கு மேலாக 4000 அடி உயரத்தில் வட்டமிட்டது. விமானத்தில் எரிபொருள் குறைந்ததும் விமானி, ஏர் டிராபிக் கன்ட்ரோலுக்கு தகவல் அளித்து, விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார்.
விமானம் படிப்படியாக கீழ்நோக்கி வர, பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் நல்வாய்ப்பாக விமானம் தரையிறங்கிய போது, சக்கரங்கள் திறக்கப்பட்டன எனவும் பெல்லி லேண்டிங்கிற்கு பதிலாக சாதாரணமாக விமானம் தரையிறக்குவது போல் விமானிகள் தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் எந்த சிக்கலும் இல்லாமல் இயல்பான முறையில் தரையிறக்கப்பட்டது, விமானத்தின் லேன்டிங் கியர் வழக்கம்போல சரியாக இயங்கியது என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பதற்றமான சூழலில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் விமானி Iqrom Rifadly Fahmi Zainal மற்றும் துணை விமானி மைத்ரி ஸ்ரீகிருஷ்ணா விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்
பெரும் பதற்றத்திற்கு மத்தியில் கூலாக அனுகி, 150 உயிர்களை காத்த அவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்