யாரும்மா நீ?.. ஒன்றரை வயதில் 3 உலக சாதனை - அசத்திய குழந்தை திருச்சி ப்ரீதிகா
திருச்சி திருவெறும்பூரில், ஒன்றரை வயது குழந்தை, 3 உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திருவெறும்பூரைச் சேர்ந்த வைத்தியநாதன் - தாரணி தம்பதியின் குழந்தை ப்ரீதிகா, ஒன்னேகால் வயதில், 190 பொருட்களின் படங்களை 11 நிமிடங்கள் 56 நொடிகளில் அடையாளம் காட்டினார். இதற்காக, வேர்ல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். அதைத் தொடர்ந்து, 40 வினாடிகளில் 50 மீட்டர் ஓடி, வேர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் 2-ஆவது முறையாக இடம் பிடித்தார். மூன்றாவதாக, எண்கள், வண்ணங்கள், உடல் உறுப்புகள், உறவுமுறைகள் ஆகியவற்றை கூறி, இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.
Next Story