முன்னாள் முதல்வர் அண்ணா சிலைக்கு குங்குமம் பூசியதால் பரபரப்பு
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிரே, முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா சிலையின் நெற்றியில் மர்மநபர்கள் குங்குமத்தை பூசியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குங்குமம் பூசிய நபரை கைது செய்யக்கோரி திமுக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக சிலை மீது பூசியிருந்த குங்குமம் அழிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
Next Story