21 குண்டுகள் முழங்க அஞ்சலி ..மீட்பு பணியில் உயிரிழந்த காவலர் நல்லடக்கம்

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ருக்குமாங்கரன் என்பவர், ஐசிஎப் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ருக்குமாங்கரன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை அன்று அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் கிராமத்திற்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் கிராமத்தில் ருக்குமாங்கரன் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, காவலர்கள் 21 குண்டுகள் முழங்க, ருக்குமாங்கிரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்