"அரசு அதிகாரிகள் முறையாக வேலை செய்வது இல்லை" - கூட்டத்தில் டென்சனான எம்.பி டி.ஆர்.பாலு

x

"அரசு அதிகாரிகள் முறையாக வேலை செய்வது இல்லை" - கூட்டத்தில் டென்சனான எம்.பி டி.ஆர்.பாலு

அரசு அதிகாரிகள் யாரும் முறையாக வேலை செய்வது இல்லையென திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிந்து கொண்டார். சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, எப்போது பார்த்தாலும் 40 சதவீத பணிகள் முடிந்து விட்டதாக அறிக்கை கொடுக்கும் அதிகாரிகள், எந்த ஆண்டு தொடங்கி எந்த ஆண்டு முடிவு பெற்றுள்ளது என்ற தெளிவான விவரங்களை வெளிப்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்