போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த விவகாரம் - நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. பேச்சுவார்த்தை மூலம் சமூக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு, போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. முதல் 2 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதையடுத்து 27 தொழிற்சங்கங்கள் மற்றும் 8 போக்குவரத்து மண்டல மேலாண் இயக்குனர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு, தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
Next Story