"போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்"... EPS வலியுறுத்தல்

x

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலின் போது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்த நிலையில், எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறியுள்ளார். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாமல், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில் கொள்ளாமல், தமிழக அரசு யாருக்காக செயல்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, குறைந்த பட்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்