திருநங்கையை காதல் திருமணம் செய்தவர் அகால மரணம் - சாகும் முன் திருநங்கை வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ

x

திருநங்கையை காதல் திருமணம் செய்தவர் அகால மரணம் - சாகும் முன் திருநங்கை வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ வைரல்

காரைக்காலில், கணவன் இறந்த துக்கத்தில் திருநங்கை மனைவி த*கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்தோஷும், காரைக்காலைச் சேர்ந்த திருநங்கை யாழினியும் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். காரைக்காலில் உள்ள வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட சந்தோஷ் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி, கடந்த 20-ம் தேதி உயிரிழந்தார். கணவன் இ றந்த சோகத்தில் இருந்த யாழினி, திடீரென வீட்டில் தூக்கிட்டு த*கொலை செய்துகொண்டார். த*கொலைக்கு முன் அவர், தமது சகோதரருக்கு வாட்ஸ் ஆப் ஆடியோ மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில், தமது கணவரை பிரிந்த வாழ முடியவில்லை என்றும், எனவே த*கொலை செய்துகொள்வதாகவும், தமது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்