ரயிலில் முன்பின் தெரியாதவர்கள் கொடுத்த டீயை குடித்த 2 பெண்களுக்கு நேர்ந்த சோகம்

x

அரக்கோணம் வழியாக நாகர்கோயில் செல்லும் ரயிலில் 2 பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த தேநீர் கொடுத்து 5 சவரன் நகை பறிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மதியனூரை சேர்ந்த ரோகிணி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் மும்பையிலிருந்து நாகர்கோயில் செல்லும் ரயிலில் பொது பெட்டியில் வந்துள்ளனர். சோலாப்பூர் ரயில் நிலையத்தில் ஏறிய 3 மர்ம நபர்கள், தேநீர் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கியதும், தாலி கம்மல், முக்குத்தி, மோதிரம் என 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நீண்ட நேரமாக 2 பெண்களும் மயக்கத்தில் இருந்ததால், ரயில்வே உதவி எண்ணுக்கு சக பயணிகள் தகவல் அளித்தனர். இதையடுத்து, அரக்கோணத்திற்கு ரயில் வந்ததும், 2 பெண்களையும் மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்