ரயில்களை பிடித்த 2024 சாபம்.. பயணிக்கவே குலைநடுங்கும் மக்கள்.. ரத்தம் உறைய வைக்கும் திடுக் பின்னணி

x

கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2024ம் ஆண்டு நடந்த ரயில் விபத்துகளை பட்டியலிடுகிறது இந்த செய்தி தொகுப்பு...

கவரப்பேட்டை ரயில் விபத்து சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், 2024ம் ஆண்டு முதல் அரங்கேறிய மிகப்பெரும் ரயில் விபத்துகளை பார்க்கலாம்...

ஜனவரி 10ம் தேதி சென்னையில் இருந்து சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாத் நம்பள்ளி அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 50 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி காலையில், டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகே சரக்கு ரயில் ஒன்றின் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன் பின்னர் ஜூன் 5ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் நியூஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரங்கபாணி அருகே தண்டவாளத்தில் நின்றிருந்த கஞ்சன் ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 11 பேர் பலியாகினர்..

நாட்டை உலுக்கிய இந்த விபத்தில் 4 பெட்டிகள் கடும் சேதத்தை சந்தித்ததோடு, 60 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் அடுத்த மாதமே ஜூலை 18ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

அதே ஜூலை மாதம் 30ம் தேதி ஜார்கண்டில் உள்ள சக்ரதர்பூர் அருகே மும்பை-ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்..

இந்த விபத்துகளை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னைக்கு அருகே கவரப்பேட்டை பகுதியில் பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்

இந்தியாவில் சமீப காலங்களாக விரைவு ரயில்கள், லூப் லைனில் நிறுத்தப்பட்டு இருக்கும் சரக்கு ரயில்க மீது மோதுவதும் மெயின் லைனில் செல்ல வேண்டிய ரயில்கள் சிக்னல் கோளாறு, மனிதத் தவறுகள், இன்டர் லாக் தொழில்நுட்ப பிரச்சனை காரணங்களால் லூப் லைனில் மாறி விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது ...

எனவே வரும் நாட்களில் பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்தி,அதிகரிக்கும் ரயில் விபத்தை தவிர்க்க சிக்னல் மேம்பாடு, கவாச் கருவி பொருத்துதல் , இன்டெர்லாக் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் அவசியமாகிறது.


Next Story

மேலும் செய்திகள்