இதய துடிப்பே நிற்கும் கடைசி திக் திக் சம்பவம்...என்ன நடக்குமோ...பதறிய நொடியில் `மாமல்லன்’ என்ட்ரி

x
  • இதய துடிப்பே நிற்கும் கடைசி திக் திக் சம்பவம்...என்ன நடக்குமோ.. பதறிய நொடியில் `மாமல்லன்’ என்ட்ரி - அந்தரத்தில் பறந்த ரயில் பெட்டிகள்
  • உயிர் பயத்தை கண்முன் காட்டிய கவரப்பேட்டை ரயில் விபத்தில், துரிதமாக நடைபெற்ற மீட்பு பணிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
  • திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் அரங்கேறிய கோர விபத்து நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்த, விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே மீட்பு பணிகளை துரிதப்படுத்தியது மீட்பு படை...
  • இரவு நேரம் என்பதால், போதிய வெளிச்சமின்றி சிரமத்துடன் தொடங்கிய மீட்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன..
  • விபத்து நடந்த பகுதியில் உருகுலைந்து கிடந்த ரயில் பெட்டிகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்..
  • கவரப்பேட்டை ரயில் நிலைய பகுதியில் இரண்டு லூப் லைன் தண்டவாளங்கள் மற்றும் இரண்டு மெயின் லைன் தண்டவாளங்கள் என 4 தண்டவாள வழித்தடங்களில் மீட்பு பணிகள் தொடங்கியது..
  • விபத்துக்குள்ளான பாக்மதி விரைவு ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ள நிலையில், அதில் 7 பெட்டிகள் தண்டவாளத்திற்கு குறுக்கே தடம்புரண்டதோடு, 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தூக்கிவீசப்பட்டு சிதறி கிடந்தன.
  • இதனால் பல முனைகளில் நடைபெற்ற மீட்பு பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
  • இதில் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை 6 ஹிட்டாச்சி கிரேன் வாகனங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்..
  • விபத்து நடந்த பகுதியில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என உறுதியாக இருந்த ரயில்வே துறை, பணிகளை துரிதப்படுத்தியது...
  • விபத்துக்குள்ளாகி தடம்புரண்ட ரயில் பெட்டிகள் சராசரியாக 33 டன் முதல் 45 டன் வரையிலான எடைக் கொண்டவை என்பதால், மீட்பு பணிகளில் சற்று சிரமம் நீடித்து வந்தது...
  • இந்நிலையில், மீட்பு பணிகளை விரைந்து முடிக்க மாமல்லன் இயந்திரம் களமிறக்கப்பட்டது...
  • 140 டன் வரை பளு தூக்கக்கூடிய சக்தி வாய்ந்த பளு தூக்கும் மாமல்லன் கருவி பிரத்யேகமாக, தண்டையார்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டது...
  • இதற்கு முன் ஜேசிபி வாகனங்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு பெட்டியாக அகற்றி வந்த சூழலில், மீட்பு பணிகளை எளிமையாக்கியது மாமல்லன் இயந்திரம்...
  • இச்சூழலில், கனமழையும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை சோதித்து பார்க்க, அனைத்து தடைகளையும் மீறி மீட்பு பணியில் மும்முரம் காட்டினர் மீட்பு படையினர்.
  • துரிதமாக செயல்பட்டு விபத்தில் இருந்து மீள வைத்த மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்ததோடு பாராட்டியும் வருகின்றனர் பொதுமக்கள்..

Next Story

மேலும் செய்திகள்