ரத்தான ரயில் மீண்டும் இயக்கம்.. தென்னக ரயில்வே அறிவிப்பு
நெல்லை - பாலக்காடு இடையே இயங்கி வந்த விரைவு ரயில், தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ரயில் இயங்கத் தொடங்கியது. நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் காலை 7-35க்கு இயங்கி வந்த பயணிகள் ரயிலில் பயணிகளின் கூட்டம் இல்லாததால், ரத்து செய்யப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
நெல்லை - தூத்துக்குடி இடையே இயங்கி வந்த பயணிகள் ரயில், ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Next Story