ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த 3 பேர்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
பாபநாசம் அருகே உள்ள உத்தாணி ரயில்வே கேட் குடமுற்று ஆற்றுப்பாலம் அருகில்,
செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை சென்ற விரைவு ரயிலில், 40 வயது தாய், தனது 11 வயது மற்றும் 9 வயது இரண்டு பெண் குழந்தைகளோடு
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
தகவல் அறிந்த போலீசார், உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கும்பகோணம் பாரத் நகரை சேர்ந்த ஆர்த்தி மற்றும் அவரது மகள்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவையில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும், ஆர்த்தியின் கணவர் ராஜேஷூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story