குளிக்கும் போது சாவை கண் முன் காட்டிய விபரீதம்

x

தென்காசி அருகே திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு மேலே உள்ள நீரோடையில் சுற்றுவட்டார மக்கள் குளிப்பது வழக்கம். இந்நிலையில், திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்