இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி திரைப்படத்தை மிஞ்சும் ..மோசடி ஆசையாக சென்றவருக்கு அல்வா கிடைத்த சோகம்

x

மதுரை, கப்பலூரை சேர்ந்தவர் கனகரத்தினம். துணி வியாபாரம் செய்து வரும் இவர், வியாபாரத்தை பெருக்குவதற்காக வங்கியில் தொழிற் கடன் குறித்து விசாரித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கனகரத்தினத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கும்பல், வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு 10 லட்ச ரூபாய் கடன் கொடுப்பதாகவும் கூறி வலை விரித்திருக்கின்றனர். இதற்கு, 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கமிஷனாக கொடுத்தால், பணம் வழங்குவதாக கும்பல் தெரிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு சென்று கொடுத்த கனகரத்தினத்திடம், ஒரு பணப்பையை கொடுத்துவிட்டு இருவரும் சென்றுள்ளனர். அவர்கள் சென்றவுடன் பையை திறந்து பார்த்த கனகரத்தினம், பையினுள் கருப்பு மை பூசப்பட்ட வெறும்தாள்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்கு, தாங்கள் கொடுத்தது கருப்பு பணமென்றும், கருப்பு மையை நீக்குவதற்கென கெமிக்கலை தாங்கள் கொடுத்து அனுப்புவதாகவும் கும்பல் கூறியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கனகரத்தினம் போலீசில் புகாரளித்த நிலையில், அரசபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வண்டியூரை சேர்ந்த வீரபத்திரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டு வந்த ரவிச்சந்திரன் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்