தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்-கதறி அழும் பெற்றோர்-நெஞ்சை உருக்கும் சோகம்

x

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சளி என்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு செவிலியர் சிகிச்சை பார்த்ததால் அந்த குழந்தை உயிரிழந்தது.

நயனசெருவு பகுதியை சேர்ந்த கனேஷ்குமார் - சோனியா தம்பதியின் ஆண் குழந்தை பிரஜை,

ஓராண்டாக சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் விடியற்காலை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர் இல்லாததால், அவருடைய ஆலோசனையின் படி செவிலியரான அனிதா, குழந்தைக்கு நெப்லேசர் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தை வீட்டில் உறங்கிய நிலையில் காலை 10 மணியளவில் திரும்பவும் இருமல் பிரச்சனை வந்துள்ளது. மீண்டும்

நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் தினேஷ், குழந்தையை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், முன்தினம் மருத்துவர் இல்லாததால் தான் குழந்தை இறந்ததாக கூறி, மருத்துவமனையில் கதறி அழுதனர்.


Next Story

மேலும் செய்திகள்