தந்தை கண்முன்னே 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் - டீ குடிக்க நின்ற நேரத்தில்..

x

ஆம்னி பேருந்து மோதியதில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கொடைக்கானலில் நிகழ்ந்துள்ளது...

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்றுள்ளது... கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியை சேர்ந்த அஜோர் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருச்சியில் இருந்து கொடைக்கானலை நோக்கி வந்துள்ளார்... அவர் பெருமாள் மலை பகுதியில் உள்ள டீக்கடையில் தேநீர் அருந்த தனது வாகனத்தை நிறுத்தி விட்டு 2 வயது குழந்தை ஆரோன் மேத்யூவுடன் இறங்கிய போது, ஆம்னி பேருந்தின் இடது பக்கத்தில் திறந்திருந்த உடைமைகள் வைக்கும் பகுதியின் கதவு மோதி, குழந்தை ஆரோன் பரிதாபமாக உயிரிழந்தார்... தந்தை அஜோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... ஆம்னி பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் தேடிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்... மலைச்சாலையில் பயணிக்கும் அனைத்து வகையான வாகனங்களும், பாதுகாப்பாகவும், மிதமான வேகத்துடன், சாலை விதிக‌ளை பின்ப‌ற்றி க‌வ‌ன‌மாக‌ இயக்கப்பட வேண்டும் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளதும்.


Next Story

மேலும் செய்திகள்