ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம் - தாய் பிரசவத்திற்கு சென்ற போது நடந்த விபரீதம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் குமரங்கணப்பள்ளியில், தாய் பிரசவத்திற்கு சென்ற நேரத்தில், 3 வயது சிறுமி ஊஞ்சல் சேலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரங்கணப்பள்ளியைச் சேர்ந்த ரவியின் மனைவி சசிகலா, 2வது பிரசவத்திற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, 3 வயதான தங்களது முதல் பெண் குழந்தையை, தாத்தா மற்றும் சித்தப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர். வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஊஞ்சல் சேலையில் சிக்கி உயிரிழந்தாள். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்