பாரம்பரிய கொங்கு ஒயிலாட்டம், கும்மி ஆடி அசத்திய பெண்கள் - மெய்சிலிர்த்து ரசித்த ஊர் மக்கள்
கரூரில் பாரம்பரிய கொங்கு ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது. கணபதிபாளையம் பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி, பெண்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்துக் கொண்டு, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர். பின்னர், முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாரம்பரிய கொங்கு ஒயிலாட்டம், ஈசன், வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் ஒரே வண்ணத்திலான உடையணிந்து ஒயிலாட்டம் ஆடினர்.
Next Story