கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
காட்டு யானைகள் முகாமிட்டதன் காரணமாக, பேரிஜம் சுற்றுலா தலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி பகுதியில், மூன்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Next Story