சுற்றுலா பயணிகளை நடுங்கவைக்கும் கோர தாண்டவம்.. ஊட்டிக்கா இந்த நிலை?
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சூறைகாற்றில் ராட்சத மரங்கள் சாய்ந்ததால், உள்ளூர் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
உதகை - மைசூர் சாலையில் மரம் விழுந்ததால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பணிக்கு செல்லும் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சூறாவளி காற்றின் தாக்கம் தொடர்ந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல தலைகுந்தா சாலை உள்ளிட்ட லவ்டேல் - மஞ்சூர் சாலையிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பங்கள் மீதும் மரங்கள் விழுந்ததால் பல்வேறு கிராம மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
Next Story