ராக்கெட் வேகத்தில் ஏறும் தக்காளி விலை..! காய்கறி விலை நிலவரம்

x

நேற்றை விட 10 ரூபாய் விலை உயர்ந்து, 1 கிலோ தக்காளி இன்று 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல் உருளை, காலிஃப்ளவர் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம், பீன்ஸ் 100 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட், கருவேப்பிலை 25 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட், தேங்காய் 28 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

ஊட்டி பீட்ரூட், வெண்டை, உஜாலா கத்திரி, முருங்கை, அவரை, மாங்காய் 40 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரி கத்திரி 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 65 ரூபாய்க்கும், பட்டாணி 200 ரூபாய்க்கும், இஞ்சி 250 ரூபாய்க்கும், பூண்டு 220 ரூபாய்க்கும், எலுமிச்சை 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்