பயனற்று கிடக்கும் பாழடைந்த கட்டடங்கள் - பொதுமக்கள் வைத்த கோரிக்கை

x

பயனற்று கிடக்கும் பாழடைந்த கட்டடங்கள் - பொதுமக்கள் வைத்த கோரிக்கை

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்கள், கழிவறைகள் பயனற்று கிடக்கும் நிலையில், அவற்றை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வளாகத்தில் உள்ள சுய உதவிக்குழுவினரின் கடைகள், கழிவறைகள் பயன்பாடற்று பாழடைந்து காணப்படுகிறது. மேலும், பழுதடைந்த வாகனங்களும் இடத்தை ஆக்கிரமித்துள்ளன. மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை நடைபெறும் போது, பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதியுறும் சூழல் உள்ளது. இதனால், பயனற்று கிடக்கும் கட்டடங்களை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஆட்சியரை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்