இன்றைய தலைப்பு செய்திகள் (13-10-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
- காசா மக்களுக்கு எச்சரிக்கை
- 7வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்..
- வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் ராணுவம்....
- உடனடியாக அனைத்து பாலஸ்தீனியர்களும் வெளியேற இன்று எச்சரிக்கை...
- 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்
- இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 4 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்...
- மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நிச்சயம் இடம் மாற்றம் செய்ய முடியாது என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல்...
- இஸ்ரேல் போர் - ஆலோசனை
- பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு...
- போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிற இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் செய்யவும் திட்டம்...
- போரை இருநாடுகளும் நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் இன்று வேண்டுகோள்..
- ''மோதல்கள் யாருக்கும் பயனளிக்காது''
- மோதல்கள் நிறைந்த உலகம் யாருக்கும் பயனளிக்காது
- டெல்லியில் நடைபெற்ற ஜி20 சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேச்சு....
- ஆப்ரேசன் அஜய்' மூலம் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் இன்று தாயகம் திரும்பினர்...
- மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வருகை...
- திமுக மகளிர் உரிமை மாநாடு
- நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாடு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சென்னை வருவதால் தீவிர பாதுகாப்பு
- 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு
- தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்...
- காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவு
- ஒரே நாளில் ரூ.20 லட்சம் அபராதம்
- சென்னையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 4 ஆயிரத்து 400 பேர் பிடிப்பட்டனர்...
- இன்று ஒரே நாளில் 20 லட்சம் ரூபாய் அபாரதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தகவல்...
Next Story