"இன்று கலைஞர் 100 விழா" - பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

x

"இன்று கலைஞர் 100 விழா" - பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

தமிழ் திரையுலகம் சார்பில் "கலைஞர் 100 விழா" சென்னை கிண்டியில் இன்று நடைபெறுகிறது.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழாவாக ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில், "கலைஞர் 100 விழா" பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், மாலை 4 மணிக்கு கலைஞர் 100 விழா நடைபெற உள்ளது, அதில், சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தமிழ் திரைத்துறையில் பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்