Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-09-2023)

x

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அ.தி.மு.க....

2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல 2026 சட்டமன்ற தேர்தலிலும், பாஜக உடன் கூட்டணி இல்லை...அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...

"கூட்டணி முறிவால், இனி எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்..." - கூட்டணி முறிவு குறித்து சிறுபான்மை மக்களிடம் உறுதிபட தெரிவிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு...

2024 நாடாளுமன்ற தேர்தலில், மற்ற கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும்...2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி...

தமிழக பா.ஜ.க. தலைமை திட்டமிட்டே மூத்த தலைவர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை விமர்சனம் செய்தது...அ.தி.மு.க. மாநாடு மற்றும் பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ். பற்றியும் விமர்சித்ததால் கூட்டணியை முறித்ததாக அறிவிப்பு...

"கூட்டணி முறிவால், இனி எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்..."கூட்டணி முறிவு குறித்து சிறுபான்மை மக்களிடம் உறுதிபட தெரிவிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு...

அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிவு குறித்து யாரும் எந்த ஒரு கருத்தும் சமூக வலை தளத்திலும் பொது வெளியிலும் தெரிவிக்க வேண்டாம்... பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அறிவுறுத்தல்...

நன்றி... மீண்டும் வராதீர்கள்! என்ற அ.தி.மு.க. ஹேஷ்டேக் டிரெண்டிங்.... வாழ்த்துக்கள்... மீண்டும் வராதீங்க! என்று, பா.ஜ.க.வும் பதிலடி...


Next Story

மேலும் செய்திகள்