இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-09-2023)

x
  • நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்...........யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 171 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது........
  • பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது................மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி குற்றச்சாட்டு..............
  • சென்னை மடிப்பாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு..............தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை பணிகளின் நிலை குறித்து வாரந்தோறும் அறிக்கை தர அதிகாரிகளுக்கு உத்தரவு...............
  • அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2022-23ம் ஆண்டில், சம்பா சாகுபடி இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு.........தகுதி வாய்ந்த 6 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..............
  • காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்..........நதிநீர் பங்கீடு வழக்கில் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..........
  • நீட் விவகாரத்தில் அரசியல்வாதிகள் மாணவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம்........புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள்.........
  • நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை திமுக போராட்டம் தொடரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை...............நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட முடியுமா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கேள்வி................

Next Story

மேலும் செய்திகள்