இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-10-2023)
- அரசு மருத்துவமனைகளில் அடிக்கடி ஆய்வு செய்து குறைகளை தீர்க்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....கல்வியும், மருத்துவமும் அரசின் இரு முக்கியமான முன்னுரிமைப் பிரிவுகள் என்பதை உணர்ந்து பணியாற்றவும் வலியுறுத்தல்......
- அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான உணவுத்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.............இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.......
- குழுவின் பரிந்துரைகள் 3 மாதங்களில் இறுதி செய்யப்பட்டு முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும் பேட்டி....பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்பு சாலைகளுக்கான அனுமதி வழங்க வழிக்காட்டு குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு........
- பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.....10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.........
- டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்த முடிவு............171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்திற்குள் கொண்டுவர விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
- ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்............நிதிநிலைமை சரியாக சரியாக ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி.........
Next Story