மணிப்பூரில் இருந்து தப்பி வந்த குடும்பத்திற்கு..! ஆட்சியர் செய்த ப்ராமிஸ்
மணிப்பூரில் இருந்து ஜோசப் என்பவர் சென்னை வந்த நிலையில், மூர்த்தி என்பவர் மனித நேயத்துடன் வீடு வாடகை எடுத்து கொடுத்து தேவையான பொருட்களை வழங்கினார். இந்நிலையில், சென்னை துணை ஆட்சியர் இளங்கோ வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மணிப்பூர் குடும்பத்தினர் தங்கியுள்ள வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். குடும்பத்தினர் விவரம், அவர்களது கல்வி தகுதி, வேலை குறித்து கேட்டறிந்தனர். மளிகை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் குறித்து கேட்டறிந்த அதிகாரிகள், பணி அனுபவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு மாதத்திற்கான மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story