அங்கன்வாடிக்கு செல்ல... வீட்டு மனையை தானமாக வழங்கிய ஆட்டோ ஓட்டுநர் | Vellore
வேலூர் மாவட்டம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்திற்கு, அங்கிருந்த காலி வீட்டு மனை வழியாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் சென்று வந்தனர். இந்நிலையில், காலி மனையின் சொந்தகாரரான ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த், வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இதனால், குழந்தைகள் ஒரு கிலோ மீட்டருக்கு சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. அந்த இடத்தை, குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது, குழந்தைகள் கர்ப்பிணிகள் செல்வதற்காக, தனது வீட்டு மனையில் இருந்து 55 அடியை ஊராட்சிக்கு தானம் வழங்குவதாக ஆனந்த் தெரிவித்தார். அவருக்கு, ஒன்றிய பெருந்தலைவர், ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்து நன்றி கூறினர்.