மேள, தாளத்துடன் குத்தாட்டம் போட்டு வந்த இளைஞர்கள்.. மெல்ல மெல்ல விநாயகர் சிலைகள் கரைப்பு

x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வைக்கபட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த, கல்வடங்கம் காவிரி ஆற்றில் 500 மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தேவூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் அமைக்கப்பட்டிருந்த, 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், கூறைநாடு பிள்ளையார்முடிச்சு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள காவிரியில் கரைக்கப்பட்டன


Next Story

மேலும் செய்திகள்