தரை தட்டி உடைந்த கப்பலால் பிறந்த சகாப்தம்.. சிலிர்க்க விடும் கோட்டை கொத்தளத்தின் பின்னணி

x

வரலாற்று சிறப்பு மிக்க தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தேசியக் கொடி ஏற்ற உள்ளார்.

தரை தட்டி உடைந்த "லாயல் அட்வெஞ்சர்" என்ற கப்பலில் இருந்த தேக்குமரத்தாலான கம்பம் எடுக்கப்பட்டு கோட்டைக் கொத்தளத்தில் கொடி கம்ப‌ம் நிறுவப்பட்டது. 1687 ஆம் வருடத்தில் கவர்னராக யேல் இருந்தபோது அமைக்கப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட இக்கொடிக் கம்பம்தான் இந்தியாவிலேயே உயரமானதாகும். இந்திய சுதந்திரத்தின்போது இதில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடி கம்பத்தில் 1974ஆம் ஆண்டு முதல் முறையாக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர் கொடி ஏற்றும் புதிய சகாப்த‌த்தை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மின்னல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் கொடி கம்ப‌ம் கடுமையாகச் சேதமடைந்தது. அதன்பின்பு, பெல் நிறுவனத்தின் துணையோடு கடல் காற்று போன்றவற்றால் எளிதில் துருப்பிடிக்காத வகையில், கொடிக்கம்பம் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திர தினத்தன்று கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடி ஏற்ற உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்