சிக்கலில் 2000 தனியார் பள்ளிகள்... கல்வித்துறை அதிரடி நடவடிக்கை | TNSchools

x

கட்டிட அனுமதி இல்லாத 2 ஆயிரம் தனியார் பள்ளிகளின் சிக்கலை தீர்க்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


கட்டிட அனுமதி இல்லாததால், அங்கீகாரம் தொடர்வதில், இரண்டாயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கில், 3 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளின் கட்டிட வரைபட அனுமதி சம்பந்தமாக, பள்ளிக் கல்வி செயலாளர் மற்றும் வீட்டு வசதி துறை செயலாளர் பங்கேற்ற கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

இதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளின் இயக்குனர் பழனிச்சாமி, அனைத்து மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர்களுக்கு விவர படிவம் அனுப்பி உள்ளார்.

எந்தெந்த பள்ளிகள், எந்தெந்த காலகட்டத்தில் எந்த மாதிரியான கட்டிட வரைபட அனுமதி பெற்றன,

2011க்கு பின் அனுமதி பெறப்படாத கட்டிடங்கள் எத்தனை, இவற்றில் நகரப் பகுதியில், கிராமப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்