கொட்டி தீர்க்க போகும் கோடை மழை - உஷாரான கூட்டுறவுத்துறை
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நியாய விலை கடைகளின் உள்ளே மழை நீர் புகாதவாறு தார்ப்பாய் கொண்டு, பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 13 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மழை மற்றும் புயல் சேதாரங்களில் இருந்து நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் சேதம் ஏற்படாமல் பாதுகாத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த குழு அவர்களது கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள நியாய விலை கடைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அதன் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மழையில் நனைந்த பொருட்கள் வழங்கப்பட்டு புகார் வந்தால் அதற்கு அலுவலர்களே முழுப் பொறுப்பு என்றும் கூறியுள்ளார். மே மாதத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து, நியாய விலைக் கடைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
Next Story