தமிழகத்தை நனைத்த எதிர்பாரா மழை.. கோயிலில் உருவான திடீர் அருவி

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தொப்பம்பட்டி, உப்பாறு அணை, கோவிந்தாபுரம், பொன்னாபுரம், கோனாபுரம், அலங்கியம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காற்றுடன் வெளுத்து வாங்கிய மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, போலுப்பள்ளி, மேலுமலை உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. வெளுத்து வாங்கிய மழையால் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் படிக்கட்டுகளில் தண்ணீர் அருவிபோல் கொட்டியது.


Next Story

மேலும் செய்திகள்