16 லட்சம் டன் இருப்பு... நிற்காமல் இயங்கும் செல்போன் டவர்கள் - தயார் நிலையில் தமிழக அரசு | TN Govt

x
  • இயற்கை இடர்பாடுகள் நேரிடின் அவசர உணவுத் தேவைக்கென அரசு கிடங்குகளில் 16 லட்சம் டன் அரிசி இருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
  • 2 ஆயிரத்து 25 நியாயவிலைக் கடைகள் தாழ்வான பகுதிகளில் செயல்பட்டு வரும் நிலையில், வெள்ள அபாயம் ஏற்பட்டால் அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அவசர உணவு தேவைக்கென அரசு கிடங்குகளில் 16 லட்சம் டன்கள் அரிசி இருப்பு உள்ளதாகவும், மாவட்டத்திற்கு 20,000 பைகள் வீதம் 5 கிலோ அரிசி கொள்ளக்கூடிய பைகள் எளிதில் கொண்டு செல்லும் வண்ணம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்தாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தகவல் தொலைதொடர்பு தடையின்றி கிடைக்க செல்போன் கோபுரங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் மின் ஜெனரேட்டர்களுக்கு தேவைப்படும் எரிபொருளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்