தமிழகத்தில் நின்று சுற்றும் மழை மேகம்... சாலைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது
தஞ்சை
தஞ்சை மாவட்டத்தை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நகரின் முக்கிய பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
பட்டுக்கோட்டை, தஞ்சை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் அதிராம்பட்டினம், மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சூளகிரி, கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான அத்திமுகம், பேரிகை, சின்னாறு, உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை பெய்தது. சென்னை தேசிய நெடுஞ்சாலை உட்பட, பல இடங்களில் சாலையில் நீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, கங்களாஞ்சேரி, கமலாபுரமை், மாங்குடி உள்ளிட்ட இடங்களில் இரவு முதல் அதிகாலை வரை மிதமான மழை பெய்து வருகிறது. மாவூர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பலியானது