தமிழகத்திற்கு பயம் காட்டும் மே மழை..கோயில், வீடுகளில் புகுந்த மழைநீர் - வெளியான காட்சி
தமிழகத்திற்கு பயம் காட்டும் மே மழை..கோயில், வீடுகளில் புகுந்த மழைநீர் - வெளியான காட்சி
கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றழுத்தம் காரணமாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பட்டணம்,புதுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார்3 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும், அணைப்பாளையம் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. சேலம் மாவட்டத்தில் அஸதம்பட்டி, சீல நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கனுக்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்ற நிலையில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோபி, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. ரயில்வே நுழைவு பாலம் மற்றும் வாய்க்காலின் ஓரத்தில் உள்ள சாலைகளில் மழை நீர் பெறுக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.