திடீர் கனமழை..மாறிய தமிழகத்தின் வானிலை | Tn Rainfall
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான பச்சூர், கொத்தூர், புதுப்பேட்டை, வேட்டப்பட்டு உள்ளிட்ட இடங்களில் திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள நயினார் பாளையம், பெத்தாசமுத்திரம், கருங்குழி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளான கோபால்பட்டி, சாணார்பட்டி, கண்ணியாபுரம், மேட்டுக்கடை, அய்யாபட்டி, கணவாய்ப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரை மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.