ஊரை சுத்தம் செய்து பிழைத்து மகளுக்கு ஊரையே சல்யூட் அடிக்க வைத்த அப்பாவின் வைராக்கியம்

x

ஊரை சுத்தம் செய்து பிழைத்து மகளுக்கு ஊரையே சல்யூட் அடிக்க வைத்த அப்பாவின் வைராக்கியம் - ரியல் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி

தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றிய அதே துறையில், நகராட்சி ஆணையராக உருவெடுத்துள்ள நெகிழ்ச்சி சம்பவத்தை குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு..

தனது தலைமுறையின் தலையெழுத்தை மாற்ற கல்வி என்ற ஆயுதம் மூலம் போராடி நகராட்சி ஆணையராக உருவெடுத்துள்ள மன்னார்குடியை சேர்ந்த துர்காவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது..

தற்போது நகராட்சி ஆணையராக அறியப்படும் துர்காவின் தந்தை, அதே துறையில் துப்புரவு பணியாளராக இருந்தவர்.

தான் படும் கஷ்டத்தை மகள் ஒருபோதும் அனுபவிக்க கூடாது என மகளை பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே படிக்க வைத்து ஆளாக்கியுள்ளார்..

தந்தையின் ஆசைப்படி தொடர்ந்து படித்து வர, பணியின் போதே துர்காவின் தந்தை உயிரிழந்தார்..

தந்தை இழந்த துக்கத்திலும் படித்து வந்த துர்கா, தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகளை எழுதி வந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் நடந்து இரு பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.

என்றாவது ஒரு நாள் தந்தையின் கனவை நிறைவேற்றமென்று துடித்த அவர், திருமணத்திற்கு பிறகும் டி.என்.பி.எஸ்.சி தேர்வை மேற்கொண்டு வந்துள்ளார்...

பல வருட முயற்சிக்கு பின்னர், தேர்வு எழுதி வெற்றி பெற்று தன் தந்தை தூய்மை பணியாளராக பணிபுரிந்த நகராட்சி துறையிலேயே நகராட்சி ஆணையராக பணி ஆணையையும் வாங்கி விட்டார்.

இவரின் கதை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ள சூழலில், பயிற்சி பெற்றால் போதும் தேர்வு எழுதி போஸ்டிங் பெற முடியும் என கூறுகிறார் துர்கா...

தற்போது திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாக ஆணையராகி உள்ள துர்காவை, இன்ஸ்பிரேஷனாக கருதி வருகின்றனர் பலர்...


Next Story

மேலும் செய்திகள்