``TNPSC ஆன்லைன் தேர்வுக்கு அனுமதி மறுப்பு'' - தேர்வர்கள் குற்றம்சாட்டு

x

``TNPSC ஆன்லைன் தேர்வுக்கு அனுமதி மறுப்பு'' - தேர்வர்கள் குற்றம்சாட்டு

திருச்செங்கோட்டில் டிஎன்பிஎஸ்சி ஆன்லைன் தேர்வுக்கு முறையான ஏற்பாடுகளை செய்யாததால் கால தாமதம் ஏற்பட்டு, தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு, திருச்செங்கோட்டில் ஒரு தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வு எழுத சேலம், ஏற்காடு, வாழப்பாடி, திருச்செங்கோடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தேர்வர்கள் வந்திருந்தனர். வளாகத்தில் இதற்கு முன்பு நடந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு பலகை இருந்ததால் மாணவர்கள் தங்கள் தேர்வறைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு ஆய்வகத்தில் தேர்வு எழுத காத்திருந்த 7 மாணவர்களுக்கு வேறு ஆய்வகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அனுப்பி உள்ளனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு மாணவர்கள் தங்கள் ஆய்வகத்தை கண்டுபிடித்துச் சென்றபோது, தாமதமாக வந்ததாக அவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்