விழுந்த பேரிடி; கேள்விக்குறியான மகளின் எதிர்காலம் - அண்ணனாக மாறிய துணை கமிஷனர்

x

பள்ளிக்கரணையில் பணம் இல்லாததால் படிப்பை பாதியில் விட்டு வேலைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு, பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயனிடம் ஒரு லட்ச ரூபாய் வழங்கி, படிக்க வைத்தார். மறைமலை நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், கணவர் இறந்து விட்டதால் சொந்த ஊரில் இருந்து வந்து, வீட்டு வேலை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். மகள் கல்லூரியில் பி.இ. ஆர்க் முதலமாண்டு படித்து வந்தார் என்றும் கூறியுள்ளார். தன்னிடம் இருந்த சேமிப்பு தொகை இரண்டரை லட்சத்தை, ஒத்திக்கு வீடு பிடித்து தருவதாக கூறியவரிடம் கொடுத்த நிலையில், அவர் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். இதனால் மகள் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியை அழைத்து பேசிய ஆணையர், படிக்க விருப்பமா என கேட்டார். மாணவி படிக்க சம்மதம் தெரிவித்த நிலையில், உடனே வியாபாரிகளிடம் இருந்து நிதி உதவி பெற்று மாணவி மற்றும் அவரது தாயிடம் வழங்கி படிக்க வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்