சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பதினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதி - முதலமைச்சர் உத்தரவு

x

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர் ஜஸ்டின், சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் ஜஸ்டின் உயிரிழந்துள்ளது காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்