129-ஆவது நபர் கைது..! தமிழகத்தை அதிர வைத்த விவகாரத்தில் திருப்பம் | Madurai

x

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய 129-ஆவது நபரை கைது செய்து, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கி வந்த அந்த நிதி நிறுவனம், பொதுமக்களிடம் பல நூறு கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இயக்குனர்கள், முகவர்கள், பணியாளர்கள் என 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், துணை நிறுவன இயக்குநரான மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சரவணசுந்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்