தினம் தோறும் பதற்றம்... பீதியில் பெற்றோர்... மொத்தமாக முடிவுகட்ட போலீசார் முடிவு

x

இ-மெயில் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வரும் நிலையில், அதற்கு முடிவுகட்டுவது குறித்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் பள்ளிகள், மருத்துவமனைகள், கல்லூரிகள் என தினந்தோறும் கடந்த ஆறு மாதங்களாக இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. ஐ.ஏ.எஸ், ஐபி.எஸ், அரசியல் தலைவர்கள் பெயரில் போலி இமெயில் மூலமாக தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு, டார்க் வெப்பை பயன்படுத்தி குற்றவாளிகள் மிரட்டல் விடுப்பதால், சைபர் கிரைம் போலீசார் இண்டர்போல் உதவியை நாடியும் எந்த பலனும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் அந்தந்த காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளன. இதனிடையே, சென்னை கோட்டூர்புரம் ஐஐடி வளாகத்தில் இயங்கும் பள்ளி மற்றும்

அபிராமபுரத்தில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்